July 18, 2017 தண்டோரா குழு
சசிகலா போட்டோ, வீடியோ அனைத்தும் பாகுபலிபட திரைப்படம் போல் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்று தினகரன் அணியில் உள்ள புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு பரப்பன அஹ்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனை சந்தித்து புகழேந்தி பேசினார். பின்னர்,வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
சசிகலா சிறையில் எந்த சலுகைகளையும் அனுபவிக்கவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட 2 மெமோக்களில் இருந்து தப்பிக்கவே டிஐஜி ரூபா சசிகலாவின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்.நாடு முழுவதும் தான் தெரிய வேண்டும் என்பதற்காக சசிகலாவின் பெயரை ரூபா பயன்படுத்தினாரா என தெரியவில்லை.
இந்தப் புகைப்படத்திற்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை சட்டப்படி சிறையில் என்ன கொடுக்கப்பட்டுள்ளதோ அது தவிர சசிகலாவிற்கு கூடுதலாக ஒன்றும் கொடுக்கப்படவில்லை. அப்புறம் எப்படி அவர் அங்கு சமைக்க முடியும்.
சசிகலா போட்டோ, வீடியோ அனைத்தும் பாகுபலிபட திரைப்படத்தை மிஞ்சும் அளவிற்கு கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும், சசிகலா தொடர்பான வீடியோவை கொண்டு வாருங்கள். அதனைப் பொய் என்பதை நான் நிரூபிக்கின்றேன். அந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று எனக்கு தெரிய வேண்டும்.
பரப்பன அக்ரஹாரா சிறை 40 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த இடத்தில் எப்படி வீடியோ எடுக்கப்பட்டது என்று தெரிய வேண்டும் எனக் கூறினார்.