April 4, 2025
தண்டோரா குழு
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை பொள்ளாச்சி சாலை மயிலேறி பாளையம் பகுதியில் உள்ள சசி க்ரியேட்டிவ் கல்லூரியில் ஸ்டெல்லா நட்சத்திர விருது STELLAR ACHIEVERS 2025 விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவன அறங்காவலர் சாமிநாதன் தலைமை தாங்கினார் கல்லூரியின் செயல்பாடு குறித்து சேர்மன் ராஜ் தீபன் பேசினார்.
கல்லூரி முதல்வர்கள் ரஞ்சித் குமார் கட்டிடக்கலைத்துறை. ராகுல் ஜித்தன் வடிவமைப்பு துறை.வரவேற்று பேசினார்
விழாவில் ஐந்து பிரிவுகளில் கட்டிடக்கலையில் சாதனை புரிந்த ஐந்துகட்டடக்கலை நிபுணர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நான்கு பிரிவுகளில்
வடிவமைப்பாளர்களுக்கான விருதுகளை மகாவீர் அசோக் ஜெயின் வழங்கி கௌரவித்தார்.சிறப்பு விருந்தினர்களாக
கட்டடக்கலை நிபுணர் பவுலர், பிலிப் ஆர் ஜே பவுலர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கட்டிடக்கலை துறை நிபுணர்கள் கல்லூரி பேராசிரியர்கள் திரளாக பங்கேற்றனர்.