• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை !

December 14, 2017 தண்டோரா குழு

கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷாவை பாலியல் வன்கொடுமை செய்த அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேரள மாநிலம் பெரும்பாவூரை ஊரைச் சேர்ந்தவர்சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் கேரள மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.

இதையடுத்து, கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட கேரள போலீசார் சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில்பதுங்கி இருந்த கட்டிட தொழிலாளி அம்ரூல் இஸ்லாமலை கைது செய்தனர். இதனிடையே எர்ணாகுளம் நீதிமன்றத்தில் 18 மாதங்களாக நடைபெற்ற வழக்கில் நேற்று முன்தினம் அமீருல் இஸ்லாம் குற்றவாளி என தீர்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று ஜிஷா குடும்பத்தினர் வலியுறுத்தினர். இந்நிலையில், ஜிஷா வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி அமீருல் இஸ்லாமுக்கு தூக்கு தண்டனை விதித்துஎர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் படிக்க