February 18, 2017 தண்டோரா குழு
சட்டபேரவைக்குள் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சட்டபேரவை உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதல்வாராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்தார். இதையடுத்து, இன்று(பிப் 18) நம்பிக்கை வாக்குகெடுப்பு சிறப்புப் சட்டபேரவை கூட்டம் கூடியது.
இதில் ஆரம்பம் முதல் அமளியில் ஈடுபட்ட ஓபிஎஸ் தரப்பினர் மற்றும் திமுகவினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வாக்கெடுப்பு வேறொரு நாளில் நடத்த வேண்டும் என்றும் வலியுறித்தினர். இதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார். இதனால் சபாநாயகரை முற்றுகையிட்ட திமுக எம்எல்ஏக்கள் அவரது இருக்கை மற்றும் மைக்கை உடைத்தனர்.
இதனால், அவை மதியம் ஒரு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். அதன் பின் மீண்டும் தொடங்கிய சட்டபேரவை கூட்டம் கூடியது. இதனைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பிற்க்கு முன்மொழிந்தார். ஆனால், திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து சபாநாயகரை முற்றிகையிட்டும் மேஜை மீது ஏறியும், காகிதத்தை கழித்தும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், திமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து, திமுக உறுப்பினர் வெளியேறாமல் கூச்சலில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அவை மீண்டும் 3 மணி வரை ஒத்திவைக்கபட்டது.
இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் மா.சுப்ரமணியம், சுந்தர், நந்தகுமார், ராஜேந்திரன், பிரகாஷ், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 20 சட்டபேரவை உறுப்பினர்கள் அவை காவலர்களால் குண்டுகட்டாக வெளியேற்றபட்டனர்.
இந்நிலையில், திமுக செயலர் தலைவரும், சட்டபேரவை எதிர்கட்சி தலைவருமான முக.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சட்டபேரவைக்குள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.