June 14, 2017 தண்டோரா குழு
தமிழக சட்டப்பேரவையில் ஜிஎஸ்டி மசோதா இன்று தாக்கல் செய்ய்யப்படவுள்ளது.அமைச்சர் வீரமணி ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூலை 19ம் தேதி வரை 24 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடரில் தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாட்டிறைச்சி விவகாரம், குடிநீர் பிரச்சனை, மதுக்கடை எதிராக பெண்கள் நடத்தும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்ப உள்ளதாக தெரிகிறது.
மேலும் தமிழக சட்டப்பேரவையில் இன்று ஜி.எஸ்.டி மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே ஜி.எஸ்.டி மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி மசோதாவை வணிகவரி அமைச்சர் வீரமணி தாக்கல் செய்ய உள்ளார்.