June 21, 2017
தண்டோரா குழு
திமுக அளித்த புகார் சம்பந்தமாக ஆளுநரிடம் இருந்து வந்துள்ள கடிதத்தை படித்து காட்ட சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“திமுக அளித்த புகார் அடிப்படையில் ஆளுநர் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆளுநரிடம் இருந்து சட்டப்பேரவைக்கு வரும் தகவல்களை படித்து காட்ட வேண்டும் என்பது சட்டம். இக்கடிதம் குறித்து சபாநாயகர், முதலமைச்சர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆளுநரிடம் இருந்து வந்துள்ள கடிதத்தை படித்து காட்ட சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.”என்றார்.
முன்னதாக கூவத்தூர் பேரம் விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ ஆதரங்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க ல்டாலின், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.