February 18, 2017
தண்டோரா குழு
சட்டப்ரபேரவையில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்களும், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் கோஷம் எழுப்பினர்.
மேலும் சபாநாயகர் தனபால் இருக்கையை முற்றுகையிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரின் மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். மைக்குகளை எம்.எல்.ஏ.,க்கள் பிடுங்கி எறிந்தனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் சபாநாயகரின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டார். இதனையடுத்து சபாநாயகரை காவலர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.