March 10, 2017
தண்டோரா குழு
சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவதற்கு சட்டப் பேரவை விதிகளில் இடமில்லை என்று தமிழக சட்டப் பேரவையின் செயலர் ஜமாலுதீன் தெரிவித்தார்.
தமிழக சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரியும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை வெளியேற்றியதை எதிர்த்தும், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தொர்பாக பேரவைச் செயலர் ஜமாலுதீன் பதில் மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.
அதில், “தமிழக சட்டப் பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு பேரவை விதிகளில் இடமில்லை. சட்டப் பேரவையில் தி.மு.க., உறுப்பனர்கள் அமளியில் ஈடுபட்டதால்தான் வெளியேற்றப்பட்டனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.