July 10, 2017
பொதுக்கூட்டங்களில் என்னை விமர்சிப்பதை விட்டுவிட்டு, சட்டமன்றத்தில் நேரடியாக பழனிசாமியை விமர்சிக்க தயாரா? என ஓபிஎஸ்க்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, மு.க.ஸ்டாலினுடன் ரகசிய கூட்டணி வைத்திருக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், எடப்பாடி பழனிசாமி அரசின் மீது தி.மு.க கிளப்பும் ஊழல் புகார்களை மூடி மறைக்க முயல்வோரின் பட்டியலில் ஓ. பன்னீர்செல்வமும் சேர்ந்திருக்கிறார்.
பா.ஜ.க நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து டெல்லியில் ஓ.பி எஸ் ஆதரித்து நின்றதாகவும்த தி.மு.க.விற்கு கிடைத்து வரும் மக்கள் ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது டெல்லி ஆசான்களை திருப்திபடுத்துவதற்காக ஓபிஎஸ் இவ்வாறான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் ஸ்டாலின் குற்றச்சாற்றினார்.
மேலும்,உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமி அரசு நீடிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்றும்து பொதுக்கூட்டங்களில் தன்னை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க ஓபிஎஸ் அஞ்சுவது ஏன்? என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.