• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சத்குருவிற்கு நன்றி சொன்ன பஞ்சாப் முதல்வர்!

May 5, 2022 தண்டோரா குழு

பஞ்சாப் மாநில அரசின் திட்டத்தை பாராட்டியமைக்காக ஈஷா நிறுவனர் சத்குருவுக்கு அம்மாநில முதல்வர் திரு. பகவந்த் மான் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“தங்களுடைய ஊக்கம் அளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி சத்குரு.எங்களுடைய அரசு, பஞ்சாப்பின் நீர் வளத்தை பாதுகாக்கவும், விவசாயிகளுக்கு உதவவும், நிலையான விவசாய முறைகளை ஊக்குவிப்பதற்கு தேவையான அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டுள்ளது.இந்த திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சென்று, இதை ஒரு மாபெரும் இயக்கமாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நிலத்தடி நீரை சேமிக்கும் விதமாக நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பிற்கு சத்குரு பாராட்டு தெரிவித்து இருந்தார்.இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்,

நிலையான விவசாய முறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக, பஞ்சாப் அரசுக்கு பாராட்டுகள். பொருளாதாரம் & சுற்றுச்சூழலை அரவணைத்து நிலையான வேளாண் முறைகளை பின்பற்ற, அரசும் கொள்கைகளும் அதற்கு உறுதுணையாக இருப்பதே முன்னேற்றத்திற்கான வழி. பஞ்சாப், பாரதம் முழுவதையும் ஊக்குவிக்கட்டும்” என பதிவிட்டு இருந்தார்.

மேலும் படிக்க