August 15, 2022 தண்டோரா குழு
சந்திரா மெட்ரிக் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
75வது சுதந்திர தின விழா மற்றும் சந்திரா மெட்ரிக் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் புத்தக கருவூலம் திறப்பு விழா நடைபெற்றது. சந்திரா மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர் ர.நந்தினி அறிவுறுதலின்படி, சந்திராா மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியர் உமா புத்தக கருவூலத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தங்களது பள்ளியின் 25 வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு முதல் சேவை திட்டமாக மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு நூலகம் வசதி ஏற்படுத்தி கொடுக்க பள்ளியின் தாளாளர் அறிவுறுத்தினார். அதன்படி மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் புத்தகம் வாசிப்பதில் ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான புத்தகங்களை எங்களது கல்வி நிறுவனம் சார்பில் 1500 க்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்டு ஒரு நூலகமாக அமைத்து கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், சந்திரா மெட்ரிக் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஷிலா, மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மைதிலி, மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுகுணா மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.