• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சமூக நிதி பற்றி பேசினால் தான் மக்களிடம் நெருங்கமுடியுங்கிற நிலை வந்துவிட்டது – இயக்குனர் பா.ரஞ்சித்

December 19, 2021 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் நீலம் பண்பாட்டு குழுமம் நடத்தும் “மார்கழியில் மக்களிசை” என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிராம இசை, நாட்டுபுற இசை என்ற பல்வேறு இசை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் கைகட்டியும் நடனமாடியும் உற்சாகமாக கண்டு களித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் ரஞ்சித்

“மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சிக்கு கடந்த வருடம் சென்னையில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இந்த வருடம் மதுரை, கோவை, சென்னை பகுதிகளில் நடத்துவதாக தெரிவித்தார்.மக்களுக்கும், இசைக்கும் இடையே நல்ல தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என கூறிய அவர் இதுவரை மேடை ஏறாத கலைஞர்களை மேடை ஏற்ற இருப்பதாக கூறினார்.

பழங்குடியின மக்களின் இசைகளை நடத்தவுள்ளதாக கூறிய அவர்
இந்த நிகழ்ச்சி மூலம் கலைஞர்கள் பயன்பெறுகிறார்கள் என தெரிவித்தார். மார்கழியில் மக்களிசை என்பது ஒதுக்கப்பட்ட இசை வடிவங்களை மீட்டெடுக்கும் முயற்சி என்றும் இன்னும் மார்கழியில் ஒரு குறிப்பிட்ட இசைகள் மட்டும் கோவில்களில் இசைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

மார்கழியை இசைக்கான காலமாக பார்க்கும் போது ஒதுக்கப்பட்ட இசையையும் கலைஞர்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்வாக கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.மேலும்தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாநில பாடலாக கொண்டு வந்தது நல்ல விஷயம் தான். சமூக நீதி குறித்த பாடல்கள் மூலம் எளிமையாக கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல முடிவதாக தெரிவித்த அவர் சமூக நீதி பற்றி பேசும் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலை உடைத் தெறியப்பட்டுள்ளதாக கூறினார்.

சமூக நிதி பற்றி பேசினால் தான் மக்களிடம் நெருங்கமுடியுங்கிற நிலை வந்து விட்டதாகவும் கூறினார். அதை பற்றி பாடக்கூடிய இசைவானி முத்து, அறிவு , இவர்களுக்கு பெரிய வரவேற்பு மக்களிடம் கிடத்துள்ளது.
இசை சக்தி வாய்ந்த ஆயுதம், சமூக விடுதலைக்காக பயன்படுத்தி உள்ளோம். பாலியல் தொல்லை காரணமாக மாணவிகள் தற்கொலையை பார்க்கும் போது
மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தவறவிட்டோம் என தோனுவதாக தெரிவித்த அவர் பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவது இல்லை எனவும் கூறினார்.

இதுபோன்ற செயல்களில் குழந்தைகளை குற்றவாளியாக மாற்றுவது அது தவறானது எனவும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறத்தப்பட்டது தெரிந்தவுடனே தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க நாம் தயராக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க