• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சரவணம்பட்டி, துடியலூர், சின்னவேடம்பட்டியில் ரூ.800 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்

September 17, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் இது குறித்து கூறுகையில்,

கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு ஊரக கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிதியில் இருந்து தண்ணீர் பந்தல் சாலை உள்பட 112 சாலைகள் 38 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீரமைக்கப்பட உள்ளது.நவ இந்தியாவில் இருந்து சித்தாபுதூர் செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குறிச்சி,குனியமுத்தூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 8 இடங்களில் நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் 265 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் 69,658 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க திட்டமிடப்பட்டது. இதில் தற்போது வரை 25 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.வெள்ளலூரில் 30 எம்எல்டி கொள்ளளவு கொண்ட பாதாள சாக்கடை நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது.

மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட சரவணம்பட்டி, துடியலூர், சின்னவேடம்பட்டி உள்ளிட்ட இடங்களில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.800 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன.இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளது. கோவையில் தற்போது 11 இடங்களில் மைக்ரோ கம்போசிங் சென்டர் செயல்பட்டு வருகின்றன.இதன்மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு 30 டன் குப்பைகள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. விரைவில் 22 நுண்ணுயிர் உற்பத்தி கூடங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன.இதன்மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு 200 டன் முதல் 300 டன் வரை குப்பைகள் செல்வதை தடுக்க முடியும்.

கிழக்கு மண்டலத்தில் 24 ஆயிரத்து 404 தெரு நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் 25-ம் தேதி முதல் மீதம் உள்ள 4 மண்டலங்களிலும் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணி தொடங்கும். கடந்த 3 ஆண்டுகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை இருமடங்கு வரை உயர்ந்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு தேவையான குடிநீர் தற்போது கிடைத்து வருகிறது. இதன் காரணமாக 5 நாட்கள் முதல் 9 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க