• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு கோவையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

October 15, 2021 தண்டோரா குழு

சர்வதேச கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு கோவையில் பொதுமக்களுக்கு முறையாக கை கழுவுதல் மற்றும் அதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

தற்போது, உலகை அச்சுறுத்திவரும் கொரோனா போன்ற நோய்த் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் கைகளை முறையாகக் அடிக்கடி கழுவ வேண்டும் என்பதையே முதன்மையாக கூறி வருகின்றது.

இந்நிலையில் கோவையில் பள்ளி மாணவ,மாணவிகளிடையே கைகழுவுதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் பெண் சேவகி கல்பனா. ஜப்பான் இண்டர்நேஷனல் கோ ஆப்ரேட்டிவ் சொசைட்டி ஜைகா எனும் அமைப்பின் தமிழக செயல்பாட்டு பங்குதாரராக செயல்பட்டு வரும் இவர்,கோவையின் பெரும்பாலான அரசு பள்ளிகளில் சென்று எவ்வாறு கை கழுவ வேண்டும்,அதன் அவசியம் குறித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட,உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கை கழுவுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கிளிசரின் சோப்பு வழங்கி கை கழுவுதன் சரியான முறை குறித்து எடுத்து கூறினார்.

இதில் கல்பனா மற்றும் அவரது குழுவினர், தொற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகளில் கை கழுவுதலின் அவசியம் ஒவ்வொரு முறையும் நன்றாக கைகழுவ குறைந்தது, 30 வினாடிகள் வரை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு முன் கைகளை தண்ணீரால் ஈரப்படுத்தி, தாராளமாக கை முழுவதும் சோப் போட்டு, நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

அதேபோல், உணவு உட்கொள்வதற்கு முன்பும், கழிவறை சென்று வந்த பின்பும் கைகளில் சோப்பு உபயோகப்படுத்தி, நன்றாக கழுவுவது அவசியம். கொரோனா போன்ற வைரஸ் கிருமி படிந்துள்ள பொருட்களை தொடும்போது, கைகள் மூலமாகவும் பரவுகின்றன.இதை தவிர்க்க கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் கூறி வருவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க