December 14, 2017 தண்டோரா குழு
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 3 விஞ்ஞானிகள் கசகஸ்தான் நாட்டில் தரையிறங்கி உள்ளனர் என்று நாசா தெரிவித்துள்ளது.
பூமியிலிருந்து சுமார் 250 மைல் உயரத்திலுள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், 5 மாதங்கள் பணி புரிவதற்காக, US National Aeronautic and Space Administrationஐ சேர்ந்த ராண்டி ப்ரேச்னிக், Russia Space Agency Roscosmosசை சேர்ந்த செர்ஜி ரயாஸ்யன்ஸ்கி, மற்றும் European Space Agencyயை சேர்ந்த இத்தாலிய நாட்டின் பவோலோ நேச்போலி ஆகிய 3 விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். தாங்கள் சென்ற பணி முடிவடைந்த பிறகு. அவர்கள் மூவரும் இன்று(டிசம்பர் 14) மதியம் சுமார் 2.37 மணியளவில் கசகஸ்தான் நாட்டின் கரைகண்டா பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கினர்.அந்த சம்பவத்தை நாசா தொலைக்காட்சி நேரடி ஒளிப்பரப்பு செய்தது.
இவர்களை தொடர்ந்து, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் பணிபுரிவதற்காக, நாசாவின் விண்வெளி வீரர் ஸ்காட் டிங்கில், Russia Space Agency Roscosmosசை சேர்ந்த ஆண்டன் ஷ்காப்லேரோவ், Japan Aerospace Exploration Agencyயை சேர்ந்த நோரிஷிகே கணாய் ஆகியோர் கசகஸ்தான் நாட்டின் BaikonurCosmodromeவிண்வெளி நிலையத்தில் இருந்து, வரும் டிசம்பர் 17ம் தேதிவிண்வெளிக்கு செல்லவுள்ளனர்.