August 9, 2017 தண்டோரா குழு
கோவா மாநிலத்தை சேர்ந்த இந்தியா கடற்படை வீரர் டாமி, 2018-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகம் முழுவதும் கப்பலில் சுற்றி வரும் போட்டியில் கலந்துகொள்ள உள்ளார். இதற்கு அவர் மரப்பலகையால் செய்யப்பட்ட சாதராண படகையே உபயோகப்படுத்த உள்ளார்.
1968-ம் ஆண்டு, சர் ராபின் நாக்ஸ் ஜான்ஸ்டன் என்பவர் தனியாக உலகம் முழுவதும் பயணித்து வந்தார். அதேபோல், அந்த போட்டியில் பங்கேற்பவர்கள் தனியாக தான் பயணம் செய்யவேண்டும் என்பது விதிமுறை.
கடந்த முறை நடைபெற்ற போட்டியில் டாமி நவீன கப்பல் மூலம் உலக பயணம் மேற்கொண்டார். ஆனால், அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில், ‘துறையா’ என்னும் மரப்படகை பயன்படுத்தி செல்லத் திட்டமிட்டுள்ளார்.
அவருடைய படகில் ஜிபிஎஸ் சேவையோ, செயற்கைக்கோள் தொலைபேசியோ, மற்ற மின்னணு கருவியோ அல்லது பாக்கெட் கால்குலேட்டரோ இருக்காது. கப்பல் பயணத்திற்கு காகித வரைபடங்கள் மட்டுமே இருக்கும்.
இங்கிலாந்தின் ப்ளைமௌத் என்னும் இடத்தில் இருந்து இந்த போட்டி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.