July 27, 2022
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாநகராட்சி சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, பழுதடைந்த இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், அனைத்து பேருந்துகளும் நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என்பதை வட்டார போக்குவரத்து அலுவலர் கண்காணிக்க வேண்டுமெனவும், மேலும் குடிநீர், கழிவறை, மின்வசதி, இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.
இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் மேற்கு மண்டலம் சேகர், வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சமுத்திரகனி, அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் செந்தில், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.