December 9, 2016 தண்டோரா குழு
தென் பசிபிக் கடற்பகுதியில் உள்ள சாலமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) ஏற்பட்டது. சாலமன் தீவு நேரத்தின்படி, அதிகாலை 4:38 மணியளவில் தாக்கிய இந்த பூகம்பம் 7.8. ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது.
கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த பூகம்பம் சாலமன் தீவு பகுதிகளான ஹவாயில் சுனாமியை உருவாக்கும் தன்மையுடையது. மலைதா என்னும் நகரை மையமாகக் கொண்டிருந்த இந்த பூகம்பத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன என்று தகவல் வெளியாகியுள்ளது.
தென் மலைதா பகுதியில் உள்ள வீடுகள் பாரம்பரிய பொருள்களை கொண்டு கட்டப்பட்டன. அங்கு இருந்த பல கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆனால், இறப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த பூகம்பத்தை தொடர்ந்து சாலமன் தீவுகள் மற்றும் அதன் அண்டை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அமெரிக்காவை தளமாக கொண்ட பசிபிக் எச்சரிக்கை மையம் (பி.டி.டபிள்யூ.சி.) இந்த எச்சரிக்கையை அனுப்பியுள்ளது. ஆனால், நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறபட்டது.
கிழக்கு கடற்கரை மற்றும் லாயல்டி தீவுகளில் வசிக்கும் மக்கள் தாழ்வான இடங்களில் இருந்து மேலான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
‘பசிபிக் ரிங் ஒப் பையர்’ பகுதியில் அமைந்திருக்கும் சாலமன் தீவு 2007ல் ஏற்பட்ட பூகம்பம் 8.1 ரிக்டராக ஆக பதிவாகியது. அந்தப் பேரழிவின் போது 50 பேர் உயிரிழந்தனர், நுற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போய்விட்டனர். 13 கிராமங்கள் அழிந்துவிட்டன. மேலும், 2013 ல் ஏற்பட்ட மற்றொரு இயற்கைப் பேரழிவின் போது, சுனாமி உண்டாகி 900 தீவுக் கூட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்தச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
“சுனாமி அச்சுறுத்தல் கடந்து போகும் வரை நாங்கள் இந்த மேல் பகுதியிலிருந்து போகமாட்டோம். நில நடுக்கம் ஏற்பட்டு சுனாமி எச்சரிக்கை குறித்த தகவல் அவருக்கு கிடைத்த உடனே 500 முதல் 600 கிராம மக்களுடன் வெளியேறினோம்” என்றார் நபினு தீவின் குடியிருப்பாளர், ஜான் பிரிமரே.
“நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது ஆனால் விடுதி சேதமடையவில்லை” என்று தலைநகர் ஹோணயாரில் உள்ள சாலமன் கிட்டானோ மேண்டானா விடுதியின் கடமை மேலாளர், ஜேம்ஸ் சமானி கூறினார்.
ஆஸ்திரேலியா அதன் கடற்கரைப் பகுதிகளில் எந்த ஆபத்தும் இல்லை என்றும் நியூசிலாந்து கடல் சார்ந்த அச்சுறுத்தல் எச்சரிக்கையை ரத்து செய்துள்ளதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளன.