• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சாலை விபத்தில் உயிர்தப்பிய கோவை எம்எல்ஏ

September 9, 2017 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கார் மீது லாரி மோதி விபத்துகுள்ளானது அதிர்ஷ்டவசமாக எம்எல்ஏ உயிர் தப்பினார்.

கோவை, சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக் எம்எல்ஏ இன்று கோவை வாலாங்குளத்தில் மழை வெள்ளத்தை பார்வையிட்டவர், தொடர்ந்து கள்ளிமடை பகுதியில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட காரில் சென்றுகொண்டிருந்தார்.

திருச்சி சாலை பெர்க்ஸ் பள்ளி அருகே சென்று கொண்டிருக்கையில்திருச்சியிலிருந்து, கோவை செல்வபுரத்திற்கு பருப்பு ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் பக்கவாட்டில், எம்எல்ஏ இருக்கை பகுதியில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரை லாரி 5 அடி இழுத்து சென்றது. இந்த விபத்தில் நா.கார்த்திக் எம்எல்ஏ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து அவருடன் காரில் வந்த தேவராஜ் என்பவர் கூறுகையில்;-
காலையில் வாலாங்குளத்தை பார்வையிட்டு, அதன்பிறகு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட திருச்சி சாலையில் சென்றுகொண்டிருக்கையில் வேகமாக வந்த லாரி மோதி விபத்தில் சிக்கியதாகவும், அதிர்ஷ்டவசமாக எம்எல்ஏ மற்றும் உடன் வந்தவர்களுக்கு காயம் இன்றி தப்பியதாக கூறினார்.

இந்நிலையில், காந்திபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து, லாரி ஓட்டுநர் திவாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எம்எல்ஏ நா.கார்த்திக் விபத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க