February 11, 2017 தண்டோரா குழு
வங்கதேச மாநிலத்தில் பேருந்து மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 13 பேர் உயிரிழந்தனர் , 2௦ பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை கூறுகையில்
“வங்கதேச மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள பாரிட்பூர் மாவட்டத்தில் வங்கதேச தலைநகர் டாக்காவையும் ,குல்னா நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை உள்ளது.
அந்த நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து எதிரில் வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்து மற்றும் வேன் தீ பற்றியது. இச்சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 13 பேர் உயிரிழந்தனர் ,2௦ பேர் படுகாயம் அடைந்தனர்” என்றார்.
பேருந்தின் எரிவாயு உருளை வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயனைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
“ இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் மோசமாக சேதமடைந்துள்ளது. இதுவரை 11 உடல்களை மீட்டுள்ளோம். வாகனத்தில் சிக்கியுள்ள இறந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளோம்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இறந்தவர்களுடைய எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று கருதுகிறோம். காயமடைந்தவர்கள் சிலர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர் “ .
என சிவில் பாதுகாப்பு உதவி இயக்குனர், மொம்டாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.