July 1, 2017 தண்டோரா குழு
குஜராத் மாநிலத்தில் வனபகுதியில் சென்ற ஆம்புலன்சை 12 சிங்கங்கள் வழிமறித்தன.இதனிடையே ஆம்புலன்ஸில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு அங்கேயே குழந்தை பிறந்தது.
குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்திலுள்ள லுன்சாபூர் கிராமத்தில் மன்குபேன் மக்வானா(32) என்னும் கர்பிணி பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவருடைய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தந்துள்ளனர். ஆம்புலன்ஸ் வந்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளது. அவருடைய உறவினர்களும் அவருடன் ஆம்புலன்ஸில் சென்றுள்ளனர்.
அந்த கிராமத்தின் அருகில் கிர் வனப்பகுதி அமைந்துள்ளது. அந்த வனப்பகுதியில் சிங்கங்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறது. அந்த வனப்பகுதி வழியாக சென்ற ஆம்புலன்சை 12 சிங்கங்கள் வழிமறித்து உள்ளன. இதை கண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வண்டியை நடுகாட்டில் நிறுத்தியுள்ளார். மகுபேனுக்கு ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. சிங்கங்கள் வாகனத்தை வழிமறித்ததால் வாகனத்தை ஓட்ட முடியாத காரணத்தால், அவருக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்க ஆம்புலன்ஸிலிருந்த ஊழியர்கள் முடிவு செய்தனர்.
உடனே மருத்துவர் ஒருவரை தொடர்புக்கொண்டு நிலமையை விளக்கியுள்ளனர். மருத்துவர் கூறிய முறைகளை பின்பற்றி சுமார் 25 நிமிடம் போராட்டதிற்கு பிறகு குழந்தையில் வெளியே எடுத்துள்ளனர்.
வாகனத்தை சுற்றியிருந்த சிங்கங்கள் மெதுவாக விலக தொடங்கியதும், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை அங்கிருந்து ஒட்டி, ஹைதரபாத் அரசு மருத்துவமனைக்கு சென்று, தாயையும் குழந்தையும் சேர்த்துள்ளனர். இருவரும் நலமாக இருப்பதாக மகுபென்னுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.