• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சினிமாவில் நடிக்க ஆர்வமா? – இதோ உள்ளங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு !

December 20, 2022 தண்டோரா குழு

சென்னையில் பிளாக் மெரினா சினிமா பயிற்சி பட்டறை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இந்த பயிற்சி பட்டறை வரும் ஜனவரி மாதம் துவங்க உள்ளது.

நடிகர்,இயக்குனர், நடிப்பு பயிற்சியாளர் மாஸ்டர் பொன்முடி மற்றும் துணை இயக்குனர் வெண்ணிலா கே ரவிக்குமார் ஆகியோர் இணைந்து இந்த பயிற்சி பட்டறையை துவங்கி உள்ளனர்.

இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.இதில்,பிளாக் மெரினா சினிமா ஒருங்கிணைப்பாளர் வெண்னிலா கே.ரவிக்குமார், V3 இயக்குனர் அமுதவாணன், நடிப்பு பயிற்சியாளர் மாஸ்டர் பொன்முடி, இயக்குனர் உயிர் சுரேஷ், டான்ஸ் மாஸ்டர் புவனேஷ், நடிகர் வேல், உதவி இயக்குநர் மகேஸ்வரன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அவர்கள்,

இன்றைய சூழலில் நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சென்னை செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. தற்போது கோவையில் இந்த பயிற்சி பட்டறை ஆரம்பிக்கும் போது செலவுகள் மற்றும் நிறைய வசதிகள் கிடைக்கும். கோவையில் நிறைய பேர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு சரியான பயிற்சி கிடைப்பதில்லை.

முறையான பயிற்சிகள் இருந்தால் வாய்ப்புகளை தேடி போவதை விட வாய்ப்புகள் தேடி வரும். எங்கள் பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் பலர் முன்னணி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கோவையிலேயே சிறந்த நடிகர்கள் கிடைத்தால் சென்னையில் இருந்து வரும் இயக்குனர்கள் திரையுலகினர் கோவை சேர்ந்த நடிகர்களையே பயன்படுத்த ஏதுவாக இருக்கும். இதனால் படத்தின் பட்ஜெட்டிற்கும் பேருதவியாக இருக்கும். அந்த வகையில் இந்த பயிற்சி பட்டறை திரையுலகத்தில் விழிக்க வேண்டும் என விரும்பும் நடிகர்களுக்கு சிறந்த தளமாக இருக்கும் என்றனர்.

இந்த பயிற்சி பட்டறையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் நடிகர்கள் மாதம் ஒருமுறை பயிற்சி வழங்க உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பாகும்.

மேலும் படிக்க