August 1, 2017
தண்டோரா குழு
கந்துவட்டி புகாரில் கைதானசினிமா பைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை தியாகராயநகரை சேர்ந்தவர் ஓட்டல் உரிமையாளர் செந்தில் கணபதி.
இவரை 4.24 கோடி கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக தியாகராயநகர் ராகவா சாலைப் பகுதியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் முகுந்த் சந்த் போத்ரா அவரது மகன்கள் சந்தீப் போத்ரா, ககன் போத்ரா ஆகியோர் மீதுவழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கந்துவட்டி வசூலித்து மிரட்டியதாக போத்ரா மீது சென்னையில் 3 பேர் புகார் அளித்தனர். இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சினிமா பைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.