• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சின்னகுட்டை தேக்கத்தை புரணமைக்க கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அமைப்புடன் கூட்டு சேர்ந்த ப்ரூக்ஃபீல்டு !

May 18, 2024 தண்டோரா குழு

கோவை ப்ரூக்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரி அஸ்வின் பாலசுப்ரமணியம் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நிறுவனர் மணிகண்டன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்

அப்போது அவர்கள் கூறியதாவது:-

கோயம்புத்தூர் மண்டலம், மதுக்கரை வட்டம் வெள்ளளூர் சின்னக்குட்டை நீர்த்தேக்கத்தின் மறுசீரமைப்பு செய்து தண்ணீர் நிரப்புதல் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.அதாவது கோவை,சின்னக்குட்டை நீர்த்தேக்கம், 2.5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது தற்போது பெய்த மழையால்,நிரம்பியுள்ளது. அப்பகுதி மக்களுக்கு மகழ்ச்சியை அளித்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் மறுசீரமைப்புப் பணி, அதாவது தொட்டியை தூர்வாரி, புனரமைத்தல்,கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு குழுவினரால் மிகவும் நுணுக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் புரூக்ஃபீல்ட்ஸ் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் மறுசீரமைப்பு பணிகளை
எங்கள் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக,குளத்தை தூர்வாரி, புனரமைக்க கோவை குளங்கள் கூட்டு சேர்ந்துள்ளோம்.இந்தப் பணியை முனைப்புடன் செய்து வருகிறோம்.

மேலும்,தற்போது அதிர்ஷ்டவசமாக மழை பெய்து குளம் நிரம்பி உள்ளது.கடும் முயற்சியின் இறுதி முடிவு இவ்வளவு சீக்கிரம் பலன் தந்தது.” இந்தப்பகுதி மிகவும் வறண்ட பகுதி,விவசாய நிலங்கள் குடியிருப்பு திட்டங்களாக மாற்றப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது அதனால். மறுசீரமைப்பு முயற்சி மூலம் விவசாயம் மீண்டும் செழிக்கும் பறவைகள், பட்டாம்பூச்சிகள் மூலம் பல்லுயிர் பெருக்கத்தில் முன்னேற்றம் காண எதிர்பார்க்கிறோம்.மற்றும் பிற வனவிலங்குகள் சுற்றுச்சூழல் அமைப்புக்குத் திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது:-

குளங்கள் தூர்வாரும் பணிகளுக்கு பணிக்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் எங்களுக்கு ஊக்கமும் உதவிகளும் செய்து வருகிறார்கள்.மேலும் மதுக்கரை வனச்சரக பகுதியில் இதுவரை 15 ஆயிரம் மரங்கள் நட்டியுள்ளோம்.5 ஆயிரம் மரங்கள் நட உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது புரூக்பீல்டு நிர்வாகி சுஜாதா உடன் இருந்தார்.

மேலும் படிக்க