March 9, 2022 தண்டோரா குழு
தனியார் டிரஸ்ட் நிறுவனம் கோவை மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் கோவை சின்னதடாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை தேர்ந்தெடுத்துள்ளது.
இப்பள்ளியில் விளையாட்டு உட்கட்டமைப்புக்கு தேவையான உபகரணங்கள், பயிற்சியாளர்களை கொண்டு தரமான பயிற்சி மற்றும் தேவையான வசதிகளை தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதிமூலமாக அமைத்துக் கொடுக்கப்பட உள்ளது.
இதன் மூலம் 12 கிராமங்களை சேர்ந்த 520 மாணவிகளுக்கு விளையாட்டு வசதிகள் அளிக்கப்படும். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் மறைந்திருக்கும் திறமைகளை வெளி கொண்டு வருவது போன்ற நோக்கங்களுடன் இத்திட்டம் செயல்படுத்தபடும். இந்த ஆண்டு ஒரு கைப்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், கபடி ஆடுகளம் மற்றும் செயல்பாடுகளுக்கான அரங்கம் ஆகியவை உருவாக்கப்படும்.
வரும் ஆண்டு ஜூன் மாதம் முதல் பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.இதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் தனியார் டிரஸ்ட் அறங்காவலர் கையெழுத்திட்டு அதனை மாவட்ட
ஆட்சியர் சமீரனிடம் வழங்கினார்.