April 3, 2017 தண்டோரா குழு
ஆர்.கே. நகர் இடைதேர்தலில் இரட்டை மின் விளக்கு சின்னத்தை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை என்று மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக கட்சி பிளவுப்பட்டதால் ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12ம் தேதி இடைதேர்தல் நடக்கவிருக்கிறது. அத்தொகுதியில், அதிமுக அம்மா கட்சி வேட்பாளராக டிடிவி. தினகரனும், ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பாக மதுசுதனன் போட்டியிடுகின்றனர். தினகரனுக்கு தொப்பி சின்னமும் மதுசுதனுக்கு இரட்டை மின் விளக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், இரட்டை மின் விளக்கு சின்னம் இரட்டை இலை சின்னம் போல் சித்தரிக்கப்படுவதாக மதுசூதனன் மீது தினகரன் தேர்தல் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இந்த புகாருக்கு விளக்கம் தரவேண்டும் என்று மதுசுதனுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அவர் பதில் கடிதம் ஒன்றை திங்கள்கிழமை(ஏப்ரல் 3) கொடுத்தார். தான் இரட்டை மின் விளக்கை தவறாக பயன்படுத்தவில்லை. ஆனால் டிடிவி. தினகரன் அதிமுக கட்சி பெயரையும் சமுக வலைதளங்களில் இரட்டை இலை சின்னத்தையும் பயன்ப்படுத்தி வருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.