• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிரியா சிறுவனின் தற்போதைய புகைப்படம்

June 7, 2017

சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு ரத்த காயங்களுடன் வெளியேறிய சிறுவன் ஓம்ரானின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் சிரியாவிலுள்ள அலெப்போ நகரில் நடந்த வான்வழி தாக்குதலில் பல கட்டடங்களும் வீடுகளும் இடிந்து விழுந்தது. மீட்புத்துறையினர் இடிப்பாடுகளில் சிக்கியிருந்த மக்களை காப்பாற்றி வந்தனர். அப்போது 5 வயது சிறுவன் ஒம்ரானை இடிப்பாடுகளிலிருந்து ராணுவத்தினர் மீட்டெடுத்தனர்.அவனுடைய 1௦ வயது சகோதரன் அலி, அந்த தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தான். ஒம்ரானுடைய முகம் ரத்த காயங்களுடன் ஆம்புலன்ஸில் அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகி அனைவரின் மனதிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இப்புகைப்படம் சிரியா நாட்டின் உள்நாட்டு போரால் அந்நாட்டு மக்கள் படும் துன்பத்தை தெளிவாக காட்டியது. அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாக பரவியது. இதை பார்த்த உலக மக்களின் இதயத்தை கரைய வைத்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு ஒம்ரான் என்ன ஆனான் என்று தெரியாமல் இருந்தது. சமீபத்தில் தன்னுடைய வீட்டில் ஒம்ரான் ஓடியாடி விளையாடும் காணொளி வெளியானது.

இது குறித்து காணொளி மூலம் ஒம்ரானின் தந்தை கூறுகையில்.

“என் மகனை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அவனுடைய பெயரை மாற்றியுள்ளேன். அவனுடைய சிகையையும் மாற்றியுள்ளேன். தற்போது அலேப்பேயில் வசிக்கும் என் மகன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறான்.

நான் சிரியாவிலேயே தங்கிவிட்டேன். இது என்னுடைய நாடு. என் பிள்ளைகளும் இங்கேயே வாழ்ந்து வளருவார்கள். சிரியாவின் குடியரசு தலைவர் ஆசாத்தை எதிர்ப்பவர்கள் தான் எங்களையும், எங்கள் நாட்டையும் துன்புறுத்தி, மக்களை இடம் பெயர்ந்து செல்ல காரணமானவர்கள். காயமடைந்த என்னுடைய மகன் ஒம்ரானின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவியபோது, எதிர்த்தரப்பு ஆர்வலர்கள் குடியரசு தலைவர் ஆசாத்திற்கு எதிராக பேச எனக்கு பணம் கொடுத்தனர்” என்று கூறினார்.

சிரியாவின் ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த சிபாலா கூறுகையில்,

“இவ்வளவு சுதந்திரத்துடன் ஒம்ரானின் தந்தை பேசியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் ஆசாத்தின் அரசாங்கத்தின் கீழ் இருக்கிறார்கள். இந்த அரசாங்கத்திற்கு எதிராக பேசும் மக்களை கைது செய்து, அவர்களை துன்புறுத்தும் அரசாங்கம் என்று அனைவருக்கும் தெரியும். ஒம்ரானின் தந்தை இப்படி பேசுவதற்கு கட்டாயப்படுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறான்” என்று கூறினார்.

மேலும் அலேப்போவில் நடந்த வான்வழி தாக்குதலின்போது, ஒம்ரான் இடிபாடுகளிலிருந்து தப்பிய புகைப்படம், சர்வதேச கவனத்தை பெற்றது. “அந்த படம் உண்மையானது அல்ல. அது வெறும் விளம்பரத்திற்காக கட்டிய புகைப்படம்” என்று சிரியாவின் குடியரசு தலைவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க