March 15, 2017 தண்டோரா குழு
உலகின் தலைசிறந்த நகரமாக ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவும் ஈராக் நாட்டின் பாக்தாத் மோசமான நகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
‘மெர்செர்’ என்னும் நிறுவனம் உலகின் தலைசிறந்த நகரங்களை குறித்து ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் தாணுப் ஆற்றுக்கரையில் அமைந்துள்ள ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னா தொடர்ந்து 8வது முறையாக தேர்ந்தடுக்கப்பட்டுள்ளது. வாழ்வதற்கு மோசமான இடமாக பாக்தாத் மறுபடியும் தேர்வாகியுள்ளது.
அரசியல், திடநிலை, சுகாதாரம், கல்வி, குற்றம், போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் அடிப்படையில் 231 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜுரிச் 2வது இடத்தையும், நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து 3வது இடத்தையும், ஜெர்மனி நாட்டின் ம்யூனிச் 4வது இடத்தையும் கனடா நாட்டின் வான்கூவர் 5 வது இடத்தையும் பிடித்துள்ளன.
ஆசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சிங்கப்பூர் 25வது இடத்தையும், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ 29வது இடத்தையும் பிடித்துள்ளன. ஆப்ரிக்க நாட்டின் துர்பன் 87வது இடத்திலுள்ளது.
லண்டன், நியூயார்க் நகரம், பாரிஸ் மற்றும் டோக்கியோ ஆகிய இடங்கள் முதல் 3௦ இடங்களுக்குள் வரவில்லை. ஜெர்மனி, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காண்டிநேவியா ஆகிய நாடுகளின் நகரங்கள் மிகவும் பின்தங்கியிருந்தது.
2௦௦3ம் ஆண்டு அமெரிக்க ராணுவ படையெடுப்பால் ஈராக் தலைநகர் பல வன்முறைகளைச் சந்தித்தது. இதனால் உலகின் மோசமான நகரமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நகர் பட்டியலில் கடைசியாக உள்ளது. டமாஸ்கஸ் நகரும் கடைசியிலிருந்து 7வது இடத்தில் உள்ளது. மத்திய ஆப்ரிக்க குடியரசு நாட்டின் பங்குள், ஏமன் தலைநகர் சனா, ஹைத்தியின் போர்ட் ஓ பிரின்ஸ், சூடான் நாட்டின் க்ஹார்டோம் மற்றும் என் ட்ஜமேனா அந்த பட்டியலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.