October 19, 2021 தண்டோரா குழு
சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் 26 வார்டுகள், நகரை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீர் நீராதாரமாக உள்ளது. அணையில் இருந்து தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.
இதன் காரணமாக அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது. மாநகராட்சி சார்பாக 96.65 எம்.எல்.டி நீர் குடிநீருக்காக எடுப்படுகிறது, என்றார்.