March 18, 2022 தண்டோரா குழு
சிறு தானிய பயிர் ஊக்குவிப்பு பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் ஊக்குவிப்பு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கோவை மாவட்டத்தில் 6 வட்டாரங்களில் (தொண்டாமுத்தூர், மதுக்கரை, சர்கார்சாமகுளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், அன்னூர்) இந்த பிரச்சார வாகனங்களில் செல்ல உள்ளது.
மக்களிடம் சிறு தானியங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறு தானியங்களின் நன்மைகள் குறித்தான குறிப்புகள், சிறு தானியங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. மேலும் 2023ம் ஆண்டினை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளதை எடுத்துரைக்கவும் இந்த பிரச்சார வாகனங்கள் இயக்கப்படுகிறது.
இந்த பிரச்சார வாகன துவக்க நிகழ்ச்சியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநர் சித்ராதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.