May 18, 2017 தண்டோரா குழு
திஹார் சிறையிலிருக்கும் ஹரியான முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா 12ம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
ஹரியான மாநிலத்தில் ஆட்சியில் இருந்த போது ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கில் கைதான சௌதாலாவுக்கு 1௦ ஆண்டு கால சிறை தண்டனை வழங்கப்பட்டது.
சிறையிலிருந்த அவர், தேசிய திறந்த நிலை பள்ளி வழியாக 12ம் தேர்வு எழுதினார். சமீபத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதில் முதல் வகுப்பில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். இதை தொடர்ந்து இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று சௌதாலா விருப்பம் தெரிவித்துள்ளார்
அவருடைய இளைய மகனும் இந்திய தேச லோக் தல் கட்சி தலைவருமான அபய் சௌதாலா கூறுகையில்,
“என் தந்தை 12ம் வகுப்பு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இளங்கலை பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.சவுதாலா பரோலில் இருந்த போதும் ஜெயிலுக்குச் சென்று பிளஸ்-2 தேர்வு எழுதினார். பின்னர் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் சிறைக்குத் திரும்பினார்.