• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிலிண்டருக்கான மானியம் அடுத்த ஆண்டு மார்ச் முதல் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

July 31, 2017 தண்டோரா குழு

சமையல் காஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 18 கோடியே 11 லட்சம் பேர் மானிய விலையில் சிலிண்டர் பெற்று வருகின்றனர்.ஆண்டுதோறும் மானிய விலையில், 12 சிலிண்டர்களை பெற முடியும். அதன் பிறகு சந்தை விலையில் சிலிண்டர்களை பெறலாம்.கடந்த 2015-ல் சிலண்டருக்கு ரூ.366-ஆக இருந்த மானியம் தற்போது ரூ.125-ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளோ அல்லது மார்ச் 31-க்கு பிறகோ ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை மாதந்தோறும் ரூ.4 வீதம் உயர்த்திக் கொள்ளவும் எண்எணய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் லோக்சபாவில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் காஸ் விலையில், வாட் வரி சேர்க்காமல், சிலிண்டருக்கு இரண்டு ரூபாய் மாதம் தோறும் உயர்த்த, கடந்த ஆண்டு ஜூலை, 1ம் தேதி முதல் உயர்த்த உத்தரவிடப்பட்டது. அதன் பின் 10 முறை காஸ் விலையை நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

கடந்த மே, 30ம் தேதி பிறப்பித்த மத்திய அரசின் உத்தரவின் மூலம், மத்திய அரசு அளித்து வரும் மானிய தொகை முழுவதுமாக நீக்கும் வரை மாதம் தோறும் சிலிண்டர் விலையில், நான்கு ரூபாய் உயர்த்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை, ஜூன், 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் வரை அமலில் இருக்கும் எனக் கூறியுள்ளார்.கடந்த 5 மாதங்களில் சமையல் சிலிண்டரின் விலை இதுவரை ரூ.32 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க