• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிலிர்த்தெழுந்த ஸ்மிரிதிஇராணி. வாயடைத்துப்போன எதிர்க்கட்சிகள்

March 3, 2016 வெங்கி சதீஷ்

இந்திய பாராளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பாராளுமன்றத்தில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதிஇராணி தனது அனல் பறக்கும் பேச்சால் பாராளுமன்ற கூட்டத்தையே கட்டிப்போட்டு வைத்திருந்தார்.

முதலில் மெதுவாகத் துவங்கிய அவர். பின்னர் தனது பேச்சில் அனல் தெறிக்க விட்டார். பாராளுமன்ற கூட்டத்தை முடக்க நினைத்த காங்கிரஸ் கட்சியை ஒரு பிடி பிடித்தார். இந்த அரங்கில் என் பெயரை கூறுகிறேன் யாராவது எனது ஜாதி பெயரை கூறமுடியுமா எனக் கேள்விகேட்டார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தெலுங்கானா பிரச்சனையில் 600 மாணவர்கள் உயிரை விட்டனர். அப்போது பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி பக்கமே எட்டிப்பார்க்காத ராகுல்காந்தி ஒரு மாணவன் தற்கொலை செய்துகொண்ட உடனே இருமுறை சென்று பார்க்கிறார். இது முழுக்க முழுக்க ஓட்டுக்காக நடத்தப்படும் நாடகம்.

அதுவும் இந்தப் பல்கலையில் தற்போது இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட நிர்வாகிகள்தான். எனவே இது அவர் தன்னைத் தானே தூற்றிக்கொல்வதற்குச் சமம் எனத் தெரிவித்தார். மேலும் அங்கு மாணவன் தூக்கில் தொங்கிய பிறகும் அவனைக் காப்பாற்ற முயலாமல் அடுத்த நாள் காலை வரை தூக்கிலேயே விட்டு வைத்திருந்தது எதனால் என்று கேள்வி கேட்டார்.

அதோடு, துர்கா பூஜையைக் கொண்டாடிய மாணவர்களைத் துர்கை ஒரு விலைமாது எனக் கேலி செய்து மனதை நோகடித்தது, யாகூப் மேனனுக்கு தூக்கு கொடுத்த நீதிபதி, அப்சல் குருவிற்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றச் சொன்ன ஜனாதிபதியை விமர்ச்சனம் செய்து போஸ்டர் ஒட்டியது ஆகியவைதான் மாணவர்களின் உரிமையா எனக் கொதித்து எழுந்தார்.

பின்னர் ஒரு கட்டத்தில் இந்தத் தேசத்திற்காகவே வாழ்வேன், தேசத்திற்காகவே வீழ்வேன், என் சாம்பல் கங்கையில் கரைக்கப்படும் வரை தேசத்திற்காகவே வாழ்வேன் எனத் தெரிவித்தார். இதனால் கூட்ட அரங்கில் இருந்த பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் கூட்டரங்கமே அமைதியாக இருந்தது.

இந்தப் பேச்சை கேட்ட பிரதமர் மோடியும் இன்று காலை ஸ்மிரிதிஇராணியின் பேச்சைப் பற்றி ட்வீட் செய்யும்போது சத்யமேவ ஜெயதே எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க