April 20, 2016 தண்டோரா குழு.
அதி வேகமாகச் செல்லும் உலகத்தில் தற்போது உணவு செய்து சாப்பிடும் பழக்கம் மாறி எதற்கெடுத்தாலும் விடுதியில் வாங்கி உண்ணும் பழக்கம் தற்போது பெருகி வருகிறது. இதற்காகவே பல நிறுவனங்கள் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அதே சமயம் அந்த உணவை ஆர்டர் கொடுத்தவருக்குக் கொண்டுவந்து சேர்க்க ஒரு சில நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வேகத்தில் சுத்தம் சுகாதாரம் என்பது ஒரு கேள்விக்குறியாக மாறிவருகிறது.
உத்தரகாண்ட மாநிலத்தில் தனியார் ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் தனக்கு ஒரு சில்லி பன்னீரும் ஸ்ப்ரிங் ரோல் தோசாவும் ஆர்டர் கொடுத்தார். பின்னர் அந்த உணவு வந்தவுடன் பிரித்து பார்த்தபோது அதில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை இருந்துள்ளது.
இதையடுத்து கொண்டுவந்து கொடுத்த நபரை அழைத்துக் கேட்டபோது எனக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார். மேலும் அந்த நிறுவனமும் எங்களுக்குக் கொடுத்த ஆர்டரை டெலிவரி செய்வதுதான் வேலை மற்றபடி பேக்கிங் செய்வது எல்லாம் உணவு நிறுவனத்தின் வேலை எனத் தட்டிக்களித்துள்ளனர்.
மேலும் உணவு நிறுவனமோ நாங்கள் சூடாக கொடுத்து சுமார் 40 நிமிடங்கள் கழித்துத்தான் அவர் பிரித்து பார்த்துள்ளார். அப்படி எனில் அந்த பிளாஸ்டிக் உருகியிருக்கும் ஆனால் அது முழு உருவத்துடன் இருப்பது உள்நோக்கத்தைக் கற்பிப்பதாக உள்ளது எனத் தப்பித்துக்கொண்டது.
ஆனால் இதுவரை இதற்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் டெலிவரி செய்த நபர் மட்டும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.