June 20, 2022
தண்டோரா குழு
கோவை சுங்கம் பகுதி சிவராம் நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் தொட்டி கட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவராம் நகர் குடியிருப்போர் சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவராம் நகர் மாநகராட்சி நினைவு பூங்கா முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட. அவர்கள் ” சட்டத்திற்குப் புறம்பாக தண்ணீர் தொட்டி கட்டாதே, இயற்கை வளங்களை அழிக்காதே, மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்து, குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்காவை அழிக்காதே” போன்ற கண்டன பதாகைகளை ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.