June 27, 2017
தண்டோரா குழு
சீனாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லியூவை புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவருக்கு பரோல் வழங்க சீன அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
சீனாவில் மனித உரிமைகளுக்காக அரசாங்கத்தை எதிர்த்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருபவர் லியூ ஜியாவோபோ. கடந்த 2௦௦9ம் ஆண்டு ஆட்சி கவிழ்க்க முயற்சி செய்ததற்காக அவருக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த 2௦1௦ம் ஆண்டு, அமெரிக்காவின் பரிந்துரையின் பேரில் லியூவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதாகவும், அமெரிக்க அரசுடன் லியூவுக்கு ரகசிய தொடர்பிருப்பதாகவும் சீன அரசு குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், கடந்த மாதம் உடல்நலக்குறைவால் சீனாவின் வட கிழக்கு நகரமான ஷென்யாங்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.இந்நிலையில் சீன அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் லியூவை பரோலில் விடுதலை செய்வதாக நேற்று அறிவித்தது.