July 29, 2017 தண்டோரா குழு
சீனாவின் புல்லட் ரயிலின் வேகத்தை 350 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.
உலகின் மிக நீளமாக அதிவேக ரயில் நெட்வொர்க் சீனாவில் காணப்படுகிறது.கடந்த 2011 ம் ஆண்டு, சீனாவின் கிழக்கு சேஜியாங் மாகணத்தில் நடந்து புல்லட் ரயில் விபத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்திற்கு பிறகு, புல்லட் ரயில்கள் 250 கிலோமீட்டர் முதல் 300 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்றும் சீன அரசு உத்தரவிட்டது.
ஆனால் தற்போது, 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்கள் சீனாவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பதாக பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காய் செல்ல சுமார் 6 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த புதிய புல்லட் ரயில் மூலம் 4.5 மணி நேரத்தில் ஷாங்காய் நகருக்கு செல்ல முடியும். இந்த புதிய ரயில் சேவை வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.
சீனாவின் 31 மாகணங்களில் 29 மாகணங்களில் புல்லட் ரயில் சேவைகள் உண்டு. ஆனால், சீனாவின் வட மேற்கு பகுதிகளான திபெத் மற்றும் நிங்சியா பகுதிகளில் மட்டுமே இந்த சேவை இன்னும் தரப்படவில்லை. விரைவில் இந்த சேவை அந்த இடங்களிலும் செயல்ப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.