July 24, 2017 தண்டோரா குழு
சீனாவில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தில் பூமிக்கு அடியில் 94 மீட்டர் உயரத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
சீனா ரயில் போக்குவரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. மெட்ரோ ரயில், புல்லெட் ரயில் போன்ற ரயில்களை வெற்றிகரமாக இயக்கி வருகிறது. இந்நிலையில் மெட்ரோ சுரங்க ரயில் பாதையை பூமிக்கு அடியில் கட்டி வருகிறது.
தென்மேற்கு சீனாவிலுள்ள சாங்கிங் நகரம் சீனாவின் ‘மலை பிரதேசம்’ என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் ஏர் ரெய்டு ஷேல்டேர்ஸ் மற்றும் தெருவிலுள்ள கட்டடங்களின் அடித்தளம் சேதம் அடைய கூடாது என்பதற்காக, ஹங்டியூடி ரயில்நிலையம் பூமிக்கடியில் சுமார் 6௦மீட்டர் ஆழத்தில் முதலில் கட்டப்பட்டது.
தற்போது, அதே ரயில்நிலையத்தில் பூமிக்கடியில் 94 மீட்டர் உயரத்தில் ரயில் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 31 அடி கீழே மாடிகள் கட்டப்பட்டு வருகிறது. இதுவே சீனாவின் ஆழமான ரயில் நிலையம் என்று கருதப்படுகிறது.
சாலையிலிருந்து பூமிக்கடியில் உள்ள ரயில்நிலையத்திற்கு செல்ல நகரும் படிக்கட்டுகள்(Escalator) அமைக்கப்படும். அதன்மூலம் ரயில்வே பிளாட்பாரத்திற்கு 3 நிமிடத்தில் பயணிகள் சென்று அடைய முடியும்.
சமீப ஆண்டுகளாக, சீனாவிலுள்ள சாலையில் அதிக போக்குவரத்து நெரிச்சல் ஏற்படுவதால், மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, சீன அரசு மெட்ரோ ரயில் போக்குவரத்தை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு வரை, சீனாவின் 3௦ நகரங்களில் சுமார் 4,153 கிலோமீட்டர் நகர்புற ரயில் நெட்வெர்க்குகள், செயல்படுத்தபட்டதாக சீனாவின் தேசிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.