October 16, 2017 தண்டோரா குழு
சீனா நாட்டை நோக்கி வரும் கானூன் புயல், மணிக்கு சுமார் 114 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று சீன வானிலை மையம் அறிவித்துள்ளது.
சீன நாட்டை நோக்கி வரும் கானூன் புயல், சீனாவின் தென் பகுதியை தாக்கும் என்றும், சுமார் 114 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், கோங்டாங் மாகணத்திலுள்ள சாங்ஜியாங் நகருக்கும் ஹாய்னான் மாகாணத்திலுள்ள வேங்சாங் நகருக்கு இடையே நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சீனாவில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், மற்றும் நீளம் ஆகிய வண்ணங்களை கொண்டு காலநிலைகளை வரையறுக்கப்படுவது வழக்கம். மிகவும் மோசமான நிலையை சிவப்பு நிறம் குறிக்கும். இரண்டாவது மோசமான நிறத்தை குறிக்கும் ஆரஞ்சு நிறஎச்சரிக்கையை சீன வானிலை மையம் அறிவித்துள்ளது.
பலத்த காற்று வீசி வருவதால் ஹாங்காங்கில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் வழியாக மக்காவ் மற்றும் அதன் அருகிலிருக்கும் தீவுகளுக்கு செல்லும் சில விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தைவான் மற்றும் சீனாவிற்கு செல்லும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் சில பகுதிகளில், 200 மில்லி மீட்டர் மழைபெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புயலின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது என்று சீன அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.