• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சுகாதார ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

November 9, 2017 தண்டோரா குழு

தமிழகம் முழுவது முள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மற்றும் குடும்பநலத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 9000 துணை சுகாதார நிலையங்களும், 1750 ஆரம்ப சுகாதார நிலையங்களும் இருக்கின்றன. தமிழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்கள் கடந்த பத்தாண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால்தான் முழுமையாக டெங்குவை கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்தனர்.

மேலும் ஆய்வாளர் பற்றாக்குறையால் விடுப்பு எடுக்காமல், நேரம் காலம் பார்க்காமல் சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகின்றவர்களுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சுகாதார ஆய்வாளராக இருந்து பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அந்த பணிக்கு உண்டான வேலைகளை மட்டும் வழங்க வேண்டும்.சுகாதார பணிகளுக்காக வீடுகளுக்கு செல்லும்போது கொசு உற்பத்தியாகாமல் மக்களிடம் சுத்தமாக வீட்டைச்சுற்றி வைத்திருக்க கூறினால் சாக்கடை எடுக்காமல் இருப்பதாகவும் அதனால்தான் கொசு உற்பத்தியாவதாக குறை கூறுகின்றனர்.

மேலும் குடிநீர் மாதத்திற்கு ஒரு சில நாட்கள்தான் வருவதால் அதை பிடித்து வைத்திருப்பதாக சொல்லுகின்றனர். மக்களின் குறைகளை உள்ளாட்சி நிர்வாகம் சரி செய்ய துப்புரவு பணியாளர்களை வைத்து சுத்தம் செய்தால்தான் நாங்கள் சுகாதார பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

மேலும் சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் ஒரே ஆய்வாளர் 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுகாதார பணிகளை மேற்கொள்வது சிரமமாக உள்ளதாகவும்,பணிநேரத்தை ஒழுங்குபடுத்தக்கோரியும், அரசு விடுமுறை, தகுதியுள்ள விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துணை இயக்குனர் சுகாதார்ப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை அலுவலகம் அருகே தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கோரிக்கைகல் நிறைவேற்றவில்லை என்றால் வரும் 13 ஆம் தேதியன்று சென்னை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திலும் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால்,இம்மாதம் மூன்றாவது வாரத்தில் 36 மணி நேர உண்ணாவிரதப்போராட்டம் தமிழக அரசை கண்டித்து நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க