October 29, 2021 தண்டோரா குழு
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்ப்பட்ட 2TN என்சிசி மாணவ மாணவிகள் சுங்கம் வாலாங்குளம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.
பிரதமர் மோடியால் துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நிலையில் அக்டோபர் 1-31ம் தேதி வரை பல்வேறு செயல்பாடுகள் இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக கோவை சுங்கம் வாலாங்குளம் பகுதியில் என்சிசி கமாண்டிங் ஆபிசர் கர்னல் சந்திரசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தூய்மை இந்தியா திட்டத்தின் நிகழ்வில் பங்கேற்று அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றினர். மேலும் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு ஓட்டமும் நடைபெற்றது.
காலை 7 மணியளவில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு அப்பகுதியில் நடைபயிற்சி மெற்கொண்ட பொதுமக்கள் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அனைவரின் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்த நிகழ்ச்சிமில் ராணுவ அதிகாரிகள் சுபேதார் குல் வந் சிங், நாயக் சுபேதார் சக்தி, அவள்தான் ஜோஸ் , தேசிய மாணவர் படை அலுவலர் சுதாகர், ஆல்பர்ட் அலெக்சாண்டர், ராகினி , ஆகியோர் கலந்து கொண்டனர்.