April 15, 2016 தண்டோரா குழு
இந்திய வானிலை அறிக்கையின் படி இன்றும் நாளையும் மதிய நேரங்களில் அதிக வெப்பம் காணப்படும் எனவும் அதனால் வயதானவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதோடு, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களின் நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் மூலம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மாலை 12 மணி முதல் 3 மணி வரை வெப்பநிலை சுமார் 41 டிகிரியைத் தொடும் என்பதால் பொதுமக்கள் அந்த நேரத்தில் அதிக உடல் களைப்பை ஏற்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்யவேண்டாம் எனவும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வெளியே செல்பவர்கள் போதிய குடிநீர் வசதிகளுடன் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதோடு, உடலுக்கு குளுர்சியைத் தரும் பானங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும் எனவும், மது உற்சாக பானம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்தாலும் மலைவாசச்தலங்களின் அருகே உள்ள ஒரு சில இடங்களில் வெப்பம் குறைவாகவே காணப்பட்டது. ஆனாலும் இந்தாண்டு கத்திரி வெயிலில் இருக்க வேண்டிய உஷ்ணம் தற்போது இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அதில் முதன்மையாக இந்தாண்டு மழைப் பொலிவு எப்படியிருக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.