August 14, 2022 தண்டோரா குழு
இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கொண்டாடும் விதமாக மூன்று சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக வீடுகள் தோறும் மூவர்ண தேசிய கொடியேற்றி மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட பா.ஜ.க.சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பா.ஜ.க.அரசு தொடர்பு பிரிவு சார்பாக சுதந்திர தின பேரணி மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்ட பா.ஜ.க.அலுவலகத்தில் துவங்கிய பேரணியில் அரசு தொடர்பு பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பா.ஜ.க.மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.பேரணியில் பா.ஜ.க. கலைச்சார பிரிவு சண்முகம் குழுவினர் பிரதமர் நேரேந்திர மோடி போன்று வேடமணிந்தும் மேலும் பாரதமாதா, சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் போன்று வேடமணிந்து வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.
இவர்களை பின்தொடர்ந்து பா.ஜ.க. மாநில,மாவட்ட நிர்வாகிகள் பேரணியாக சென்றனர்.தொடர்ந்து காந்திபுரம், சிவானந்தாகாலனி,லட்சுமி மில்ஸ்,போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தேசிய கொடிகளையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர்கள் மோகன் குமார், பச்சம்மாள் மற்றும் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி துரை என்கிற சின்னதுரை, அரசு தொடர்பு பிரிவு நிர்வாகிகள் காந்திமதி, ரவிச்சந்திரன்,சுனில் குமார் மற்றும் பாபு என்கிற நந்து,சுரேஷ், நரேஷ் பாபு என்கிற சின்னா, குமார்,சக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.