May 31, 2022 தண்டோரா குழு
உலக புகையிலை ஒழிப்பு தினம் என்ற நாள் என்பது புகையிலை பயன்பாட்டின் கெடுதல்களை பற்றி உலக அளவில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புகையிலையின் பயன்பாட்டை குறைத்து அல்லது முழுமையாக நிறுத்திவிட உலக மக்களை ஊக்குவிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு முயற்சியாகும். நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் , நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய் , நாள்பட்ட இதய நோய்கள் மற்றும் குழந்தை பேறின்மை ஆகியவற்றுக்கு புகையிலை பயன்பாடு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்நிலையில், புகையிலை பயன்பாட்டின் கெடுதல்களையும் அதனை தடை முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு KMCH மருத்துவமனை கைவிடுவோம் ‘ என்ற ஒரு கையெழுத்து நிகழ்ச்சி மே 31 – ந்தேதி KMCH வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு KMCH மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் Dr அருண் N பழனிசாமி , மற்றும் KMCH மருத்துவர்கள் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது. பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதும் புகையிலை பயன்பாட்டின் கெடுதல்களை மக்களிடையே பரப்புவதும் தான் இந்த நிகழ்ச்சியின் லட்சியமாகும்.
500 க்கும் மேற்பட்ட KMCH மருத்துவமனை மருத்துவர்கள் , செவிலியர்கள் , பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற தொடர் முயற்சிகளின் மூலம் புகையிலை பயன்பாட்டை முழுமையாக தடை செய்வதில் KMCH பெரும் பங்காற்றும் என்று மருத்துவமனை இயக்குனர் , Dr அருண் N பழனிசாமி , அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார் . பின் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.