August 2, 2017 தண்டோரா குழு
சுவிட்சர்லாந்து நாட்டில் மலைகளை இணைக்கும் உலகின் நீளமாக தொங்கும் நடை மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜேர்மாட் மாட்டேர்ஹோர்ன் என்னும் சுவிஸ் ஆல்பைன் ரிசார்ட்டில், Charles Kuonen என்னும் உலகின் நீளமான நடை மேம்பாலம் திறப்பட்டுள்ளது. அதிக உயரங்களை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக, 10 வாரங்களுக்குள் கட்டப்பட்ட, இந்த பாலம் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி திறக்கப்பட்டுள்ளது.இந்த பாலம் சுமார் 494 மீட்டர் நீளமும், நிலத்திலிருந்து 85 மீட்டர் உயரமும், 65 சென்டிமீட்டர் அகலும் கொண்டது.
இதற்கு முன்பாக ஜெர்மனி நாட்டில் உள்ள டைடன் ஆர்.டி தொங்கும் பாலம் தான் உலகின் மிக நீளமான நடை மேம்பாலமாகாக இருந்து வந்தது. அந்த சாதனையை சுவிட்சர்லாந்து மேம்பாலம் முறியடித்துள்ளது. உலகின் மிக நீளமான இந்த நடைமேம்பாலம் 10 வாரங்களில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.