April 25, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் இறந்தகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் அரசியலமைப்புகள் விவசாயிகள் என பல்வேறு தரப்பு நிறுவனம் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேணுகோபால் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம் சிறுமுகை, மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கடந்த 21 ஆம் தேதி சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதம் ஆனது. மான், மயில், காட்டுபன்றி, யானை போன்ற வனவிலங்குகள் தொல்லையால் வாழை இப்பகுதிகளில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகின்றது.
ஒரு வாழைக்கு உற்பத்தி செலவாக ரூ.150 வரை ஆகிறது. டெல்டா மாவட்டங்களில் மழையினால் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது. அதே போல் வாழை விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.