June 6, 2017
தண்டோரா குழு
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் கடந்த மாதம் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதன் பின் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இதனிடையே இன்னும் ஓரிரு நாளில் பருவமழை தொடங்கம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி ,அடையாறு, பெசன்ட் நகர், அசோக் நகர், பாரிமுனை, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், பட்டினப்பாக்கம், ராயப்பேட்டை போன்ற பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் தவித்து வந்த சென்னை மாநகர மக்கள் இந்த மழை காரணமாக மகிழ்ச்சியடைந்துள்ளனர்.