May 18, 2017 தண்டோரா குழு
சென்னையில் இந்தாண்டு இதுவரையில்லாத அளவாக 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.சென்னையில் இன்று காலை முதலே வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று காலை இதமான சூழல் நிலவிய நிலையில் இன்று காலை 4 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் அதிகரித்து 42 டிகிரி செல்சியஸைத் தொட்டது. இது இதற்கு முந்தைய நாட்களில் இல்லாத அளவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வடமேற்கு திசையில் இருந்து வரும் காற்று வறண்ட காற்றாக இருப்பதால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
முன்னதாக கடந்த 16-ம் தேதி, தமிழக வரலாற்றில் முதல் முறையாக 114 டிகிரி ஃபாரன்ஹீட் (45.5 டிகிரி செல்சியஸ்) வெயில் திருத்தணியில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.