June 21, 2017 தண்டோரா குழு
பி.டெக். இளநிலை மாணவர்கள் இரட்டை பட்டம் பெறும் புதிய திட்டம் ஒன்றை சென்னை ஐஐடி அறிமுகபடுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், சென்னையில் உள்ள பிரபல ஐஐடி கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை தேர்வு செய்து, கல்வி பயின்று வருகிறார்கள். இந்த கல்வி ஆண்டில், சென்னை ஐஐடியில் பி.டெக். பட்டம் சேரும் மாணவ மாணவிகள் இரட்டை பட்டம் பெறும் வாய்பை பெறுகிறார்கள்.
சென்னை ஐஐடி யில் பி.டெக். மற்றும் எம்.டெக் இரட்டை பட்ட படிப்பை தேர்வு செய்யும் மாணவ மாணவிகள், Interdisciplinary Dual Degree Program (ID DD) திட்டத்தையும் சேர்ந்து 5 ஆண்டுகள் படித்த பிறகு, பி.டெக் பாடத்தில் பட்டமும், Interdisciplinary Dual Degree Program வழியாக எம்.டெக் பட்டமும் பெறுவார்கள். மாணவர்களின் 5 வது செமெஸ்டரின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த CGPA மதிப்பெண் 8 புள்ளியாக இருக்கவேண்டும்.
சென்னை ஐஐடி இயக்குனர், பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில்,
“ஐஐடி-எம், அதன் இளநிலை மற்றும் Dual Degree மாணவர்கள் Advanced Material and Nano Technology, Biomedical Engineering, Computational Engineering and Data Science ஆகிய நான்கு பாடங்களில் இரட்டை பட்டம் பெற முடியும். பின்னர், Energy Systems, Battery Technology, Internet of Things, Industy 4.0 and Management ஆகிய பாடங்களை இந்த திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.