October 27, 2017 தண்டோரா குழு
சென்னையில் போலீசாரின் தீவீர வேட்டையின் எதிரொலியாக டி.பி சத்திரத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் டி.பி.சத்திரம்,அயனாவரம், கீழ்பாக்கம்,ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவல் வந்தது.இதனையடுத்து கீழ்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில்,கீழ்பாக்கம் உதவி ஆணையர் அரிக்குமார் தலைமையில் டி.பி சத்திரம் ஆய்வாளர் தயாளன் ஆகியயோர் கொண்ட குழுவினர் டி.பி சத்திரம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் போலீஸ் வாகனத்தை கண்டு ஓடினான். அவனை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அவன் டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த சந்திரன்(எ)உஸ்(23) என தெரியவந்தது.
மேலும்,அவனிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்தப்பட்ட விசாரணையில் அவனது கூட்டாளிகள் லோகநாதன் மற்றும் துரைராஜ் அந்த பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.
இதனையடுத்து கூட்டாளிகளை பிடிக்க சென்ற போது லோகநாதன் மட்டும் போலீசாருக்கு பயந்து தலைமறைவானான்.மேலும், துரைராஜிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசாரின் இந்த துரித நடவடிக்கைக்கு மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பாராட்டினார்.